தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள விஷயங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) செயல்முறை மே 6 அன்று தொடங்கியது, சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை செயல்முறைகளை முடித்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 6 ஆம் தேதியன்று ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் பதிவேற்றம் ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜுலை 10 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்தநிலையில், மாணவர்கள் எப்படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, நிறைய மாணவர்கள் அதிக கட் ஆஃப் எடுத்தும் தரம் குறைவான கல்லூரிகளில் சேர்க்கைப் பெறுகின்றனர். நல்ல கல்லூரியில் படித்தால் தான் நல்ல வேலை வாய்ப்பு பெற முடியும். எனவே நல்ல கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
190க்கு மேல் கட் ஆஃப் உள்ளவர்களுக்கு டாப் 5-7 கல்லூரிகளில், அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸே கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டு சில இரண்டாம் சுற்று கவுன்சலிங்கில் நிரம்பக் கூடிய கல்லூரிகளில் சீட் தேர்வு செய்துள்ளனர்.
வீட்டிற்கு அருகாமையில் உள்ளது என்பதற்காக கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். சிறந்த கல்லூரிகளுக்கு நேரில் சென்று, விசாரித்து, ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள்.
சில மாணவர்கள் முதலாம் ஆண்டில் ஒரு சாதாரண கல்லூரியில் படித்துவிட்டு, இரண்டாம் ஆண்டில் வேறு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்தை அணுகுகிறார்கள். இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“