/tamil-ie/media/media_files/uploads/2022/01/Dhanush-1200by667.jpg)
Tollywood producers who are working with dhanush are very happy
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்த தி கிரே மேன் ஹாலிவுட் படமும் இந்தாண்டு வெளியாக உள்ளது.
சமீபத்தில் தனுஷ், அக்ஷ்யகுமார், சாரா அலி கான் நடிப்பில் வெளியான அந்த்ரங்கி ரே பாலிவுட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வடமாநில ரசிகர்கள் பலருக்கும் தனுஷையும், அவரது இயல்பான நடிப்பையும் மிகவும் பிடித்து தனுஷின் ரசிகர்களாக மாறிவிட்டனர்.
லைஃப்ஸ்டைல் பொருத்தவரையில் தமிழ் நடிகர்களின் லைஃப்ஸ்டைலும், வட இந்திய ஹீரோக்களின் லைஃப்ஸ்டைலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் தனுஷ் எப்போதும் வேஷ்டி, சட்டை அல்லது சாதராண உடையில் சிம்பிள் லுக்கில் பார்க்க மாஸாக இருப்பார். ஆனால் வடமாநில ஹீரோக்கள் தங்களது உடைகளுக்காகவே நிறைய செலவு செய்வார்கள். எப்போதும் அவர்களுடன் நாலைந்து பெளன்சர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
தற்போது டோலிவுட் வட்டாரங்களின்படி, தனுஷ் மொத்தப் படத்துக்கான அவரது ஆடைகளுக்கு 7-8 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது ஒரு டோலிவுட் நட்சத்திர நடிகர் வசூலிப்பதில் 10% கூட இல்லை. இதுவே, ஒரு நட்சத்திர தெலுங்கு நடிகருக்கு இந்த ஆடையின் விலை பல கோடி ரூபாய் என்றும், மேக்கப் மற்றும் பிற அணிகலன்களுக்கான கட்டணம் சேர்த்து மொத்தம் 1 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
அதனால் தனுஷூடன் பணிபுரியும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவரது எளிமை மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் தனுஷ் நடிப்பில் ‘தி கிரே மேன்’ தொடங்கி தமிழில் ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ என 4 நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. தற்போது தனுஷ், தெலுங்கு – தமிழ் இருமொழிகளில் உருவாகும் ‘சார்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.