Tollywood Sex racket:
அமெரிக்காவில் தெலுங்கு மற்றும் கன்னட நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய ஆந்திரா தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தயாரிப்பாளராக இருப்பவர்கள் தான் கிஷான் மோடுகுமுடி என்ற ஸ்ரீராஜ் சென்னுபட்டி - சந்திரகலா பூர்ணிமா தம்பதி. ஆந்திராவை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி வந்துள்ளனர். அங்கிருந்தப்படி தெலுங்கு மற்றும் கன்னட நடிகைகளை ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி, பணத்தை காட்டி ஏமாற்றியும் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வந்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் மிகவும் வசதியாக இவர்கள் பாலியல் தொழில் செய்து வருவதை இவர்களிடம் சிக்கிய நடிகை ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் தம்பதிகளை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க ஹோம்லேன்ட் செக்யூரிட்டி விசாரணை அமைப்பு கைது செய்தது. பின்பு இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. வாய்ப்புக்கள் இல்லாததாலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் இளம் நடிகைகளை வைத்தே இந்த தம்பதியினர் இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நடக்கும் கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நடிகைகளை முதலில் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்பு, அவர்களை பாலியல் படம் எடுக்கவும், விபச்சாரத்திலும் ஈடுப்படுத்தியுள்ளனர். இவர்களின் செயலுக்கு மறுப்பு தெரிவிக்கும் நடிகைகளை அடித்தும் துன்புறுத்தியும் மிரட்டியும் இத்தகைய செயலை செய்ய வைத்துள்ளனர்.மேலும் இந்த செயலுக்கு பழகிப் போன சில நடிகைகள் தங்களிடம் வரும் கஸ்டமர்களிடம் 1000 டாலர் முதல் 3000 டாலர் வரை பணம் வசூலித்துள்ளனர். ஹோட்டல் ரெக்கார்டுகள், டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட விவரங்கள் என அனைத்து ஆதாரங்களையும் அமெரிக்க விசாரணை ஏஜெஎன்சிகள் நீதிமன்றத்திடம் சமர்பித்துள்ளனர்.
10க்கும் அதிகமான சிறிய நடிகைகளை இப்படி இவர்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தம்பதியொனர் மீது அமெரிக்க காவல் துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.