தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் சினிமா பரந்து விரிந்தது. இங்கு தயாரிக்கப்படும் பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டாகும்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பலம் கணக்கிட முடியாதது. இங்கு அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் யார் என்று பார்ப்போம்...
பட்டியலுக்கு நெருக்கமானவர்கள்
ஜீவா, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா, சந்தானம் ஆகியோர் முதல் 15 பேர் பட்டியலில் இடம் பிடிக்கக் கூடியவர்கள். ஜீவா 2-3 கோடியும், விஷால், ஆர்யா, சந்தானம் 3-5 கோடியும், ஜெயம் ரவி 4-5 கோடியும் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
10. சிம்பு - 7-8 கோடி
உண்மையான ரசிகர்களையும், நல்ல ஓபனிங்கையும் கொண்டவர் சிம்பு. முதலில் 10 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த இவர் கொடுத்ததோ அடுத்தடுத்த ஃப்ளாப் படங்கள். பின்னன் ‘செக்க சிவந்த வானம்’ ஹிட்டானதால், இவர் மார்க்கெட் ஏறத் தொடங்கியது. இருப்பினும் உயர்ந்த மார்க்கெட்டை ‘வந்தா ராஜாவா தான் வருவேன்” பதம் பார்த்து விட்டது.
9. விஜய் சேதுபதி - 8 கோடி
தமிழ் சினிமாவில் இன்றைய ட்ரெண்ட் விஜய் சேதுபதி தான். 2018-ல் இவர் நடித்த அத்தனைப் படங்களும் சமச்சீரான வெற்றியைப் பெற்றன. தற்போது தமிழகம் தவிர்த்து, வெளி மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
8. கார்த்தி - தனுஷ் - 10 கோடி
வெற்றி தோல்வி என இரண்டையும் மாறி மாறி பேலன்ஸ் செய்துக் கொண்டிருக்கும் நடிகர்கள். தீரன், கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த ஹிட்களைக் கொடுத்த கார்த்திக்கு சமீபத்தில் வெளியான ’தேவ்’ தோல்வியை தழுவியது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தனுஷின் ‘வட சென்னை’ வெற்றி பெற்றது. ஆனால் மாரி 2 தோல்வியடைந்தது.
7. சிவகார்த்திகேயன் - 15 கோடி
தமிழ் சினிமாவில் அசூர வளர்ச்சியடைந்த நடிகர். ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர். சீக்கிரம் வளர்ந்து வரும் இவர், நிறைய பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
6. விக்ரம் - 20 கோடி
திறமை வாய்ந்த, கதைக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணிந்த நடிகர். தென்னிந்திய சினிமா ரசிகர்களின் அன்பை அளவுக் கடந்து பெற்றிருப்பவர். சமீபத்தில் இவருக்கு பெரிதாக எந்தப் படமும் கை கொடுக்கவில்லை. இருப்பினும் அவருக்கான க்ரேஸ் அப்படியே தான் இருக்கிறது.
5. சூர்யா - 20-22 கோடி
இவரின் என்.ஜி.கே, காப்பான் ஆகியப் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் சராசரி இடங்களைப் பிடிக்கும் இவரது படத்திற்கு, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரசிகர்கள் உண்டு.
4. கமல் ஹாசன் 25-30 கோடி
யாருடனும் ஒப்பிட முடியாத நடிகர் கமல். புது புது யுக்திகளை கலையில் கையாள்பவர். எத்தனை காலம் கடந்தாலும் கொண்டாடும்படியான படங்களை கொடுப்பவர்.
3. அஜித் - 35 கோடி
பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் வெற்றியடைந்ததால், தனது அடுத்தப் படமான ‘நேர்க்கொண்ட பார்வைக்கு’ சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம் அஜித்.
2. விஜய் - 50 கோடி
தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டுகளை உருவாக்குபவர் விஜய். தெறி, மெர்சல், சர்கார் என அடுத்தடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். தென்னிந்தியா முழுக்கவே வேர் பிடித்தி பரவியிருக்கிறது இவருக்கான ரசிகர்கள் கூட்டம்.
1.ரஜினி - 60 கோடி
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாரான இவரின் ரசிகர்களை கணக்கிடுவது கடினம். அப்படி உலகளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். இவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களுக்கு திருவிழா தான். சமீபத்தில் வெளியான இவரின் 2.0 மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்களும் வசூல் சாதனை படைக்க மறக்கவில்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.