Advertisment

டி.ஆர்.பி-யில் டாப் 10 சீரியல்: ஆதிக்கம் செலுத்தும் எதிர்பாராத சன் டிவி சீரியல்கள்

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகும் சீரியல்களை டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டு 46வது வாரத்துக்கான டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்கல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
Singa penne

டி.ஆர்.பி-யில் டாப் 10 சீரியல்

Top 10 TV Serials: தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகும் சீரியல்களை டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டு 46வது வாரத்துக்கான  டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்கல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

Advertisment

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த 46வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் எவை என்று பார்ப்போம். இந்த வாரம் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. இதனால், டிவி சீரியல்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே சீரியல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் 7 இடங்களை சன் டிவி சீரியல்களே பிடித்திருக்கின்றன. டாப் 10 சீரியல்களில் முதல் 5 இடங்களில் வரும் பாக்கியலட்சுமி இந்த வாரம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 



1.சிங்க பெண்ணே: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.20 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. 

2.கயல்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் 2வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.34 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. 

3. வானத்தைப்போல: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.88 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 

4. எதிர்நீச்சல்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 4-வது இடத்தில் இருந்த நிலையில் 9.78 புள்ளிகளை பெற்று இந்த முறை நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. 

5. சுந்தரி: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.66 புள்ளிகளை பெற்ற ஐந்தாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. 

6. இனியா: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 6-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.06 புள்ளிகளை பெற்று அதுபோலவே இந்த முறை ஆறாவது இடத்தில் இருக்கிறது. 

7. ஆனந்த ராகம்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 7-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.51 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. 

8. சிறகடிக்க ஆசை: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.49 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

9. ஆஹா கல்யாணம்: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.17 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. 

10. பாக்கியலட்சுமி: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.06 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment