டாப் 10 சீரியல்கள்: டி.ஆர்.பி-யில் சன் டிவி சீரியல்களை விடாமல் துரத்தும் 3 விஜய் டிவி சீரியல்கள்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டி.ஆர்பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டின் 8வது வாரத்தில் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் வரிசை வெளியாகியிருக்கிறது.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டி.ஆர்பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டின் 8வது வாரத்தில் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் வரிசை வெளியாகியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
top 10 serials

டாப் 10 சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Top 10 Tamil Serial: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டி.ஆர்பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டின் 8வது வாரத்தில் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் வரிசை வெளியாகியிருக்கிறது.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டி.ஆர்பி ரேட்டிங் அடிப்படையில், இந்த ஆண்டின் 8வது வாரத்திற்கான டாப் 10 இடங்கள் பிடித்த சீரியல்களின் வரிசை வெளியாகியிருக்கிறது.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த தமிழ் டாப் 10 சீரியல்களில் சன் டிவி சீரியல்களே முதல் 5 இடங்களைப் பிடித்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த வாரமும் டி.ஆர்.பி.யில் சன் டிவி சீரியல்களை விஜய் டிவியின் 3 சீரியல்கள் விடாமல் துரத்துகின்றன.

அதே நேரத்தில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, சன் டிவியில், சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டி.ஆர்.பி.யில் சரிவை சந்தித்திருக்கின்றன.  இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டி.ஆ.ர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. 

Advertisment
Advertisements

1.சிங்க பெண்ணே: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் முதல் இடத்த்தைப் பிடித்துள்ளது. இந்த முறை 11.64 புள்ளிகளை பெற்று சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

2.எதிர்நீச்சல்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 10.64 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. 

3.கயல்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டி.ஆர்.பி-யில் 10.50 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

3.வானத்தைப்போல: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 9.49 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

5.இனியா: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 4வது இடத்தில் இருந்த நிலையில், இந்த முறை டி.ஆர்.பி ரேட்டிங்கில் 8.90 புள்ளிகளை பெற்று 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

6.சுந்தரி: 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த வாரம் டி.ஆர்.பி.யில் 8.23 புள்ளிகளை பெற்று 6வது இடத்துக்கு சரிந்துள்ளது.

7. சிறகடிக்க ஆசை: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை டி.ஆர்.பி ரேட்டிங்கில் 7.83 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

8.பாக்கியலட்சுமி: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், டி.ஆர்.பி ரேட்டிங்கில் இந்த முறை 7.08 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.

9.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த முறை 6.50 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.

10.ஆஹா கல்யாணம்: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் கல்யாணம் சீரியல் இந்த முறை 5.86 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Top 10 TV Serials

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: