தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை டி.ஆர்.பி அடிப்படையில், ஒவ்வொரு வாரமும் டாப் 10 இடங்களைப் பிடித்த சிரியல்களின் பட்டியல் வெளியாகிறது. அந்த அடிப்படையில், தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டி.ஆர்.பி அடிப்படையில், இந்த ஆண்டின் 38-வது வாரத்துக்கான டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் வரிசை வெளியாகி இருக்கிறது.
தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இந்த வாரம் சீரியல்களின் வரிசையில் பெரும் மாற்றம் கண்டிருக்கிறது.
இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக பார்க்கப்பட்ட சீரியல்களின் டி.ஆர்.பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களைப் பார்ப்போம்.
1 கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வாரம் 9.07புள்ளிகளை பெற்றுமுதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
2 சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 8.56 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
3 மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.40 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.
4 மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.32 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.
5. சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.77 புள்ளிகளைப் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
6 சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 7.17 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
7 மல்லி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 6.80 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
8 பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.47 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
9 பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.34 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
10 ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 5.76 புள்ளிகள் பெற்று 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“