Advertisment

டாப் 10 சீரியல்கள்: டி.ஆர்.பி-யில் மேலே வந்து சாதனை... விடாமல் துரத்தும் விஜய் டிவி சீரியல்கள்

இந்த முறை டி.ஆர்.பி தரவரிசையில் டாப் 5 இடங்களை சன் டிவி சீரியல்களே பிடித்திருக்கின்றன. ஆனாலும், விஜய் டிவி சீரியல்கள் விடாமல் துரத்தி வருகின்றன.

author-image
WebDesk
New Update
top 10

டாப் 10 சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு இடையே டி.ஆர்.பி எந்த சீரியல் டாப் என்று ஒவ்வொரு வாரமும் பெரும் போட்டி நடந்து வருகிறது. 

Advertisment

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டி.ஆர்.பி அடிப்படையில் இந்த ஆண்டின் 4வது வாரத்திற்கான டாப் 10 இடங்களின் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. 

இந்த முறை டி.ஆர்.பி தரவரிசையில் டாப் 5 இடங்களை சன் டிவி சீரியல்களே பிடித்திருக்கின்றன. ஆனாலும், விஜய் டிவி சீரியல்கள் விடாமல் துரத்தி வருகின்றன.

சீரியல்களின் டி.ஆர்.பி தரவரிசை கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரம் பல சீரியல்கள் யாரும் எதிர்பாராத அளவில் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த பின்னடைவுக்கு சரியான காரணம் தெரியவில்லை. 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டி.ஆர்.பி-யில் சரிவை சந்தித்திருக்கிறது. சில சீரியல்கள் மேலே ஏறி வந்துள்ளன. 

இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. டாப் 10 சீரியல்களைப் பார்ப்போம்.

sp

1. சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.01 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

kayal

2.கயல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.34 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

Ethirneechal Serial

3.எதிர்நீச்சல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 3வது இடத்தில் இருந்த நிலையில் 9.98 புள்ளிகளை பெற்று இந்த முறை 3வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

4.வானத்தைப்போல 

சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.79 புள்ளிகளை பெற்று 4வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

5.சுந்தரி 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.56 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

sa 

6. சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.55 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

7. இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 7வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.67 புள்ளிகளை பெற்று 7வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

b ps 2

8.பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் மகா சங்கமம்: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் சேர்ந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. மகா சங்கமம் 6.68 புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.

 

9.ஆஹா கல்யாணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 6.34 புள்ளிகளை பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 

10.ஆனந்த ராகம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.05 புள்ளிகளை பெற்று 10-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Top 10 TV Serials
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment