டாப் 20 டிவி பிரபலங்கள் இவங்கதானாம்… கண்ணம்மாவுக்கு எந்த இடம்?

2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலில் பிரபல பாரதி கண்ணம்மா சீரிய ஹீரோயின் ரோஷ்னி ஹரிபிரியன் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதைப் பாருங்கள்.

top 20 Most Desirable Woman On Tamil Television 2020, டாப் 20 டிவி பிரபல நடிகைகள், barathi kannamma roshni haripriyan, பாரதி கண்ணம்மா, ரோஷ்னி ஹிரிபிரியன், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், டிடி, ஷிவானி நாராயணன், ஆல்யா மானசா, top 20 tv actress, ramya pandian, shivani narayanan, ayesha, alya manasa, dd, chandini tamilarasan

2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதைப் பாருங்கள்.

தற்போது சினிமா நடிகைகளைவிட டிவி சீரியல் நடிகைகள், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பிரபலமாக உள்ளனர். அதனால், எண்டர்டெயின்மெண்ட், லைஃப்ஸ்டைல் ஸ்டோரிகளில் கவனத்தைப் பெறும் சென்னை டைம்ஸ் 2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் சீசன் 4 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.

  1. ரம்யா பாண்டியன்

டிவியில் ஜோக்கர் படத்தில் நடித்து கவனத்தைப் பெற்றிருந்த ரம்யா பாண்டியன் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். குக் வித் கோமாளி, பிக் பாஸ் என எல்லா நிகழ்ச்சிகளிலும் தனது தனித்துவத்தால் ரசிகர்களை ஈர்த்த ரம்யா முதலிடம் பெற்றுள்ளார்.

  1. ரோஷ்னி ஹரிபிரியன்:

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்த ரோஷினி ஹரிபிரியன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தனது எளிமையான தோற்றத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

  1. பவித்ரா லட்சுமி

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் மானாட மயிலாட போன்ற டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தவர். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் ஃபைனலுக்கு முன்னேறி தனது க்யூட்டான அழகால் ரசிகர்களைக் கவர்ந்த பவித்ரா லட்சுமி மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் 2020-ல் மிகவும் விரும்பத்தக்க டாப் 20 பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக உள்ளார்.

  1. நக்ஷத்ரா நாகேஷ்

கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்து பார்வையாளர்களை ஈர்த்த நக்ஷத்ரா நாகேஷ் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலதிபர் ராகவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

  1. ஆயிஷா

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சத்யா சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவுடி பேபி என்றழைக்கப்படும் ஆயிஷா 5வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சத்யா சீரியலில் ரவுடி பேபியாக கலக்கி வருகிறார்.

  1. ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் ‘பகல் நிலவு’ சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷிவானி நாராயணன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

  1. ஆல்யா மானசா

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்த ஆல்யா மானசா 7வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ராஜா ராணி 2 சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற மகள் உள்ளார்.

  1. டிடி

திவ்யதர்ஷினி என்கிற டிடி, தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக நுழைந்து வெற்றி கொடி பறக்கவிட்டு வருகிறார். டிடி 2020-ல் மிகவும் விரும்பத்தக்க டாப் 20 பெண்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

  1. கிகி விஜய்

மிகவும் பிஸியான தொகுப்பாளரான கிகி விஜய். மானாட மயிலாட, நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இவர் தனது கணவர் சாந்தனு பாக்யராஜுடன் பல வேடிக்கையான தொடர்களை இயக்கி நடித்து indie space-ல் நுழைந்தார்.

10.சாந்தினி தமிழரசன்

டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்த சாந்தினி தமிழரசன் 2019-ஆம் ஆண்டில் தாழம்பூ சீரியல் மூலம் டிவிக்கு அறிமுகமானார். ரெட்டை ரோஜாவில் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களை அடுத்து, இந்த பட்டியலில் 11 முதல் 20 இடங்கள் முறையே அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹிமா பிந்து உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Top 20 most desirable woman on tamil television 2020 barathi kannamma roshni haripriyan which place

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com