'இசைப்புயல்' ஏ ஆர் ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
'ரோஜா' படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராஃப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த ரஹ்மான், பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டினார்.
26 ஆண்டுகளாக இசையுலகில் தனி ராஜ்ஜியமே நடத்தி வரும் ரஹ்மான், இன்னமும் ரசிகர்களின் டேஸ்டிற்கு ஏற்ப இசையை அறிமுகம் செய்து, அவர்களை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார். எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும், இவரின் தனித்தன்மையை டச் செய்ய முடியவில்லை.
இன்னும் சொல்லப் போனால், தமிழில் இவர் தற்போது இசையமைக்கும் பல மெட்டுகள் அட்வான்ஸ் ரகத்திலேயே உள்ளது. இந்தப் படத்திற்கு எதற்கு இவ்வளவு பயங்கரமான சாங்? என்று ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு தான் அவரது இசையமைப்பு உள்ளது. ரசிகர்களை விட, 10 வருடங்கள் முன்னோக்கியே, அதாவது அட்வான்ஸாகவே அவரது இசைத் தன்மை உள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் அவரது சிறந்த பிஜிஎம் (பின்னணி இசை) சில உங்களுக்காக இதோ,