Advertisment

இணையத்தில் கசிந்த வாரிசு பட காட்சி... ரூட்டை மாற்றிய நடிகை ஆண்ட்ரியா... டாப் 5 சினிமா

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
இணையத்தில் கசிந்த வாரிசு பட காட்சி... ரூட்டை மாற்றிய நடிகை ஆண்ட்ரியா... டாப் 5 சினிமா

ரூட்டை மாற்றிய நடிகை ஆண்டரியா

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகை பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்ட ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2, அனல்மேல் பனித்துளி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவரின் கைவம் 5 படங்கள் உள்ள நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே அதிகம் தன்னை தேடி வருவதாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற கதைகளுக்குதான் தான் முக்கியத்தவம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பா?

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. 2-பாகங்களாக தயாரான இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக படக்குழு மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, தற்போது 2-ம் பாகத்தில் டப்பிங் ரீரெக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. காட்சிகள் திருப்தியாக இல்லை என்றால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால் அதற்காக அவசியம் ஏற்படவில்லை. எதாவது குறை தெரிந்தால் மீண்டும் படப்பிடிப்பு நடத்துவது குறித்து யோசிப்போம் என்று கூறியுள்ளனர்.

திருமணம் குறித்து பேசிய விஷால்

தற்போது லத்தி பட விழாவுக்காக ஐதராபாத் சென்றுள்ள நடிகர் விஷால், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3500 நடிகர் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த நாங்கள் உழைத்து வருகிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு வரும் முகூர்த்தத்தில் எனது திருமணம் நடக்கும். எல்லோருக்கும் அழைப்பு வரும் என்று கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தியின் புதிய கெட்டப்

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அனு இமனுவேல் நாயகியாக நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் கார்த்தியின் வித்தியாசமான கெட்டப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த கெட்டப் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் கசிந்தது வாரிசு பட காட்சிகள்

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இதனிடையே வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள படக்குழுவினர் காட்சியை திருட்டுத்தனமாக படம் பிடித்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment