தனியார் ஊடக நிறுவனம் நடத்திய சர்வேயில் பிரபலமான சீரியல் கதாபாத்திரங்களில் டாப் 5 இடங்களில் கண்ணம்மா 3வது இடத்தையும் முதல் இடத்தை சன் டிவி நடிகையும் பிடித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும்தான் தற்போது போட்டி காணப்படுகிறது. சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு இணையான பிரபலத்துடனும் புகழுடனும் சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் வலம் வருகிறார்கள். டிவி சீரியல் நடிகைகள் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதால் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். சில முன்னணி டிவி சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளைவிட மிகவும் பாப்புலராக இருக்கிறார்கள்.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் என்றைக்கும் கோலோச்சுவது சீரியல்கள்தான். முன்னணி பொழுது போக்கு தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி, கலைஞர் டிவிகள் இடையே எந்த டிவியின் எந்த சீரியல் டி.ஆர்.பி-யில் முதலிடத்தில் உள்ளது என்று ஒரு மிகப்பெரிய போட்டியே நடக்கிறது.
தற்போது, சன் டிவியின் ரோஜா சீரியலும், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் இடையேதான் டி.ஆர்.பி முதலிடத்திற்கு மிகப் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான், தற்போது தமிழ் டிவி சீரியல்களில் எந்த கதாப்பாத்திரம் அதிகம் பிரபலம் என டாப் 5 கதாபாத்திரங்கள் யார் என Ormax Media வெளியிட்டுள்ளது. அதில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் நாயகி பாத்திரம் ரோஜாதான் முதலிடம் பிடித்து இருகிறது. இரண்டாம் இடத்தை ரோஜா சீரியலின் ஹீரோ அர்ஜுன் கதாபாத்திரம் பிடித்துள்ளது. 3வது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாத்திரம் பிடித்துள்ளது. நான்காம் இடத்தையும் சுந்தரி கதாபாத்திரமும் மற்றும் ஐந்தாம் இடத்தில் அபியும் நானும் சீரியல் அபி கதாபாத்திரமும் பிடித்துள்ளனர்.
அதே போல, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டாப் 5 பிரபலமானவர்கள் பட்டியலில் புகழ் முதலிடம் பிடித்துள்ளார். இவரையடுத்து, பிரியங்கா 2வது இடத்தையும் ஷிவாங்கி 3வது இடத்திலும், ஒரு பட காமெடியில் வடிவேலு 4வது இடத்தையும் நீயா நானா கோபி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டிவி சீரியல்களில் டாப் 5 சீரியல்களின் பிரபல கதாபாத்திரங்களில் 3வது இடத்தை கண்ணம்மா மட்டுமே பிடித்திருந்த நிலையில், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வடிவேலு தவிர, மற்ற எல்லா இடங்களையும் விஜய் டிவி பிரபலங்களே பிடித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"