Sun Tv Serial: டிவி சேனல்கள் எல்லாமே டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட டிவிக்கள் பட்டியல் வெளியாகிறது. இந்திய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சேனல்களை அவற்றின் பார்வையாளர்களை அடிப்படையாக வைத்து டாப் 5 டிவி களையும் டாப் 5 நிகழ்ச்சிகளையும் அறிவித்து வருகிறது. இந்த பட்டியலை மொழிவாரியாகவும் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் பிராந்திய மொழிகளில் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் இருப்பது தமிழ்மொழியில்தான். தமிழில் செய்திச்சேனல்கள் ஒரு பக்கம் இருக்கிறது. அதே போல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் என பல தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேனல்களின் முக்கிய நிகழ்ச்சி சீரியல்கள்தான். இதில், அதிக பார்வையாளர்களைக் கொண்ட சீரியல்களே முதலிடத்தைப் பிடிக்கின்றன.
அந்த அடிப்படையில், மொழிகளிலேயே அந்த வகையில், இந்திய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் இந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சீரியல்களும் அந்த சீரியல் எந்த டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டார் விஜய் டியிவில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அதிக பார்வையாளர்கள் பார்க்கும் சீரியலாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/top-5-tamil-serial-300x167.jpg)
இதற்கு அடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையடுத்து, அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியல் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
5வது இடத்தை ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் மகா சங்கமம் பிடித்துள்ளது.
இதன் மூலம், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"