Advertisment

ஃபார்முக்கு திரும்பிய சிறகடிக்க ஆசை சீரியல்; முதல் இடத்தில் சன் டிவியின் ‘கயல்’

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், இந்த வாரம் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடைத்தைப் பிடித்துள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
kayal and siragadikka aasai

டாப் 5 தமிழ் சீரியல்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், இந்த வாரம் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடைத்தைப் பிடித்துள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை முதலிடத்துக்கு வந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

Advertisment

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி ஆகிய தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் இடையே டி.ஆர்.பி ரேட்டிங்கில் கடும் போட்டி நிலவுகிறது. தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பிரதான நிகழ்ச்சியே சீரியல்கள்தான். 

சன் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் ஆதிக்க செலுத்தி வருகின்றன. அவ்வப்போது, விஜய் டிவி சீரியல்கள், ஜீ தமிழ் சீரியல்கள் முதல் 5 இடங்களில் இடம்பெற்று போட்டி கொடுத்துள்ளன. 

அந்த வகையில், இந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஓரிரு வாரங்கள் முதல் இடத்தைப் பிடித்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சிலவாரங்கள் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் ஃபார்முக்கு திரும்பி டாப் 5 சீரியல்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

கயல் சீரியல்

இந்த வாரம் சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

சுந்தரி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

வானத்தைப் போல சீரியல்

சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

சிறகடிக்க ஆசை சீரியல் 

இந்த வாரம் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. டாப் 5 இடத்திற்குள் வந்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

அதே நேரத்தில் வழக்கமாக டாப் 5 இடங்களில் இடம்பெறும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் இடம்பெறவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment