/indian-express-tamil/media/media_files/2025/01/12/bILDMQLN8fCvPne22Ew5.jpg)
சினிமா என்பது பல மொழி மக்களை இணைக்கும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கு முன்பு அலைமோதும் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் தங்களது கதாநாயகர்களின் படங்களை வரவேற்றனர். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாததால் பெரும்பாலான இயக்குநர்கள் ஓடிடியில் வெப் தொடர்களை அறிமுகப்படுத்தினர். ஊரடங்கு என்று வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருந்தது.
இதையடுத்து, திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களை விட விடு ஓடிடி-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். தற்போதைய சூழலில் முன்னணி ஹீரோக்களின் படங்களை மட்டுமே ரசிகர்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். மற்றவை ஓடிடியில் வெளியாகி விடுகிறது. ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் அல்லது இரண்டு வாரத்திற்குள் ஓடிடி வந்துவிடுகிறது. தற்போது திரையரங்கில் குவியும் வசூலை விட ஓடிடியில் குவியும் வியூஸ் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த வார ஓடிடியில் அதிக வியூஸை அள்ளிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
அதிக வியூஸை அள்ளிய பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள படம் ‘மா’ திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது. இப்படம் கடந்த வாரம் 13 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. அடுத்ததாக நான்காம் இடத்தில் இந்தியில் வெளியான ‘இன்ஸ்பெக்டர் செண்டே’ (Inspector Zende' உள்ளது. சிறையில் இருந்து தப்பித்து சென்ற சீரியல் கில்லரை கண்டுபிடிக்க போராடும் காவல்துறை அதிகாரியின் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படம் 15 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மூன்றாவது இடத்தில் கிரைம், திரில்லர், கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான ‘மாலிக்’ திரைப்படம் உள்ளது. இப்படம் 16 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ரொமாண்டிக் ஜானரில் வெளிவந்த இந்தி படமான ‘மெட்ரோ இன் டினோ’ (Metro in Dino) படம் உள்ளது. இப்படம் 22 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. முதல் இடத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் ‘கிங்டம்’ உள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களை ஈர்க்கத் தவறிய இந்த படம் ஓடிடியில் 31 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.