பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக இருப்பவர் ரித்விகா. இவர் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisment
பிக் பாஸ் 2-ல் ரித்விகா:
தமிழ் மொழியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது நடந்து வருகிறது. சுமார் 70 நாட்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் மக்களின் அன்பை சேகரித்து வீட்டில் இருப்பவர் ரித்விகா.
Advertisment
Advertisements
இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதே, இவரது படங்கள் சமீபக் காலமாக வெளிவரவில்லை என்றும், அதற்கு இந்த நிகழ்ச்சி உதவும் என்றும் தெரிவித்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல புகழை சம்பாதித்துள்ளார். இவர் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் ஒன்று வெளியாகியுள்ளது.
டார்ச் லைட் படம்:
இவருடன் இணைந்து நடிகை சதா, சுஜாதா, வருண் உதய், தினேஷ் குமார், தினேஷ் குமார் ஆகிய பலரும் நடித்துள்ள டார்ச் லைட் படத்தை மஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகைகள் விலைப் பெண்களாக நடித்துள்ளனர்.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கை எத்தனை கடினங்களை கடந்து வருகிறது என்பதை கூறும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.