நடிகர் அஜித்தின் காலில் விழுந்து வணங்கி பாடம் கற்க வேண்டும் என்று பிரபல நடிகை மீனா வாசு கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் ரசிகையான மீனா வாசு:
’தல அஜித்’ இந்த பெயரை கேட்டவுடன் வரும் கரகோஷங்கள் வானத்தை பிளக்கும் என்பது திரையுலகினருக்கு தெரிந்த ஒன்று. விருது விழாவில் தொடங்கி, இசை வெளியீட்டு விழா, பொது விழா என அனைத்து நடிகர் அஜித் பற்றி பேசினாலே அடுத்த 5 நிமிடங்களுக்கு கைத்தட்டல்களும், விசில்களும் பறக்கும்.
அந்த அளவிற்கு ரசிகர்களுக்கும் அஜித்திற்கு இடையே உள்ள இணைப்பு பிரிக்க முடியாத ஒன்று. சினிமாவை பொருத்தவரையில் முக்கிய பிரபலங்கள் கூட தான் அஜித் ஃபேன் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ளுவார்கள்.
இந்த மேஜிக் அஜித்திற்கு மட்டுமே சாத்தியம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அஜித் பற்றி பிரபல தெலுங்கு நடிகை மீனா வாசு தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கும் கருத்து ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
அஜித் தற்போது நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் தெலுங்கு நடிகை மீனா வாசு சிறிய ரோலில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட அவர், அஜித்துடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ”இது ஒரு ரசிகையின் தருணம். அஜித்தை போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு இனிமையான, எளிமையான மனிதர். ஒரே ஒரு ஹிட் கொடுத்த நடிகர்கள் அதன்பின்னர் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் இருப்பதை நான் பல நடிகர்களிடம் பார்த்திருக்கிறேன்.
ஈகோ என்கிற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களெல்லாம் அஜித் அவர்களின் காலைக் கழுவி, தொட்டு வணங்கினால், அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும் என்பதே எனது கருத்து" என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.
மீனா வாசுவின் இந்த பதிவு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.