Advertisment

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்க: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை மனு

மார்க் ஆண்டனி படத்தில் திருநங்கைகள், LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவையாகவும் அவமானப்படுத்துவதாகவும் உள்ளது.

author-image
WebDesk
New Update
Cbe.jpg

கோவையைச் சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (செப்.19) புகார் மனு அளித்தார். அதில், சமீபத்தில் ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே சூரியா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள், LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவையாகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாகவும் உள்ளது.

Advertisment

இது போன்ற திரைப்படங்களினால்  திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுவதாகவும் எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் இயக்குனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் பாலியல் உறவுக்காக அலைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வை.ஜி மகேந்திரனையும் திருநங்கை போல் காட்டி எவ்வித Positive நிகழ்வையும் காட்டாமல் விட்டுவிட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் ஆண்கள், திருநங்கைகள் போல் வேடமிட்டு விஷாலை கொலை செய்வதற்கு வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.

மேலும் தற்போது வரை திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இருந்து தான் வந்துள்ளது. பலரும் தங்களை படத்தை படமாக பாருங்கள் என கூறுகிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகள் உரிமைகளை வழங்கிவிட்டு இதனை கூறுங்கள்" எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment