/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-194700-2025-09-08-19-47-18.jpg)
தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடியனாக பங்கேற்று பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பல கெட்டப்புகள் போட்டு மக்களை சிரிக்க வைத்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, “ நாஞ்சில் விஜயன் கடந்த ஏழு வருடங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தார்.
தற்போது என்னை மனதளவில் புண்படுத்துகிறார். மாதம்பட்டி ரங்கராஜால் கர்ப்பமாகி இருக்கும் ஜாய் கிரிஷ்டினாவால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய பிரபலம்.
ஒரு பெண்ணிற்கே நியாயம் கிடைக்காத நிலையில் ஒரு திருநங்கைக்கு நியாயம் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எனக்கு மனதளவில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்.
நாஞ்சில் விஜயனும் நானும் 11 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் நாங்கள் நெருங்கி பழக ஆரம்பித்தோம். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். தற்போது நான் திருநங்கை என்பதால் தன்னுடைய பெயர் கெட்டுபோய்விடும் என்று பயப்படுகிறார்.
நான் திருநங்கை என்பது என்னுடன் பழகும் போதும், ஒன்றாக இருக்கும் போதும் தெரியவில்லையா? என்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் சட்டப்பூர்வமாக அவரை அணுகலாம் என்றால் என்னை பார்க்க நாஞ்சில் விஜயன் தயாராக இல்லை. இதனால் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மனதளவில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நாஞ்சில் விஜயன் அவரது திருமணத்திற்கு முன்பே என்னுடன் பழகி வந்தார். திருமணம் முடிந்து அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கூட என்னுடன் பழகி வந்தார். குழந்தை பிறந்த பின்பு தான் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். நாங்கள் பழகியது அவரது குடும்பத்திற்கும் தெரியும். நாஞ்சில் விஜயன் குடும்பத்தார் அவருக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு வரை என்னுடன் நன்றாக பழகினார்கள். நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆன பின்பு என்னுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்கள்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.