New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/cats-10.jpg)
Trending Viral Video of Airtel Super Singer Title winner Nikhil Mathew sings Vaikasi Nilavea
“ஒரிஜினல் கவரைக்” காட்டிலும் உங்களின் இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.
Trending Viral Video of Airtel Super Singer Title winner Nikhil Mathew sings Vaikasi Nilavea
Trending Viral Video of Airtel Super Singer Title winner Nikhil Mathew sings Vaikasi Nilavea : காடு திறந்து கிடக்கின்றது...! இந்த பாடலை உண்மையாகவே பாடியவர்கள் யாராய் இருந்த போதும், விஜய் டிவி சூப்பர் சிங்கரில் நிகில் மேத்யூ அந்த பாடலை பாடிய போது, அந்த பாட்டும் மீண்டும் உயிர் கொண்டது. அவரின் ஜீவனே உருகி பாடும் பாடலாய் அது இருந்தது. இன்றும் அந்த பாடலை தேடிப் போய் பார்ப்பது எத்தனை பேர்.
சமீபத்தில் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனாவின் தொற்றில் இருந்து மனித குலத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். நமக்கு சோர்வு அளிக்கும் போதெல்லாம் இசை நம்மை ஆட்டுவிக்கும் என்பதைப் போல் அழகாய் இரண்டு ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை பாடி, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பாடகர் நிகில் மேத்யூ. இன்றும் அந்த ஜீவன் உருகி பாடலைப் பொழிகின்றது. நாங்கள் கேட்டு ரசித்ததை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
இந்த பாடலுக்கு கீழே கமெண்ட்டில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் “ஒரிஜினல் கவரைக் காட்டிலும்” உங்களின் இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் தமிழில் தொடர்ந்து பாட வேண்டும். உங்களை ஏன் எந்த இசையமைப்பாளர்களும் தேர்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உன்னாலே உன்னாலே படத்தில் இருக்கும் மற்றொரு பாடலையும் பாடி தங்களின் ரசிகர்களுக்கு விருந்தே படைத்துள்ளார் நம்முடைய நிகில் மேத்யூ. உங்களின் ரசிகர்களைப் போலவே நாங்களும் கேட்டுக் கொள்கின்றோம் நிறைய தமிழ் பாடல்களைப் பாடுங்கள் நிகில் மேத்யூ.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.