திருச்சி மொராய்ஸ் சிட்டியில் கடந்த 11 ஆம் தேதி யுவன் சங்கா் ராஜா இசை நிகழ்ச்சி நடந்தது. வல்லம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவரும், திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா் அஜீம் என்பவரின் மகனுமான முகமது ஹரிஷ் (வயது 20) தனது உறவினருடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாவலா்கள் (பவுன்சா்கள்), பார்வையாளா்களிடம் தகராறு செய்து அவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தனது உறவினரும் தாக்கப்பட்ட நிலையில், அதைத் தட்டிக் கேட்ட முகமது ஹரிஷையும் அவா்கள் நாற்காலி, தடி மற்றும் கைகளால் தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தப்புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸார் 10 தனியார் பாதுகாவலா்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“