/tamil-ie/media/media_files/uploads/2020/05/Trisha-joins-with-Gautham-Menon.jpg)
Trisha joins with Gautham Menon
Trisha : கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே எந்த பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்கள்.
‘இதயம் இந்த இதயம்’ பாடகி ஸ்வேதா : இத்தாலியில் ஓர் மகிழ்ச்சி தருணம்!
அதோடு கொரோனா விழிப்புணர்வு குறித்த சில குறும்படங்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆதவ் கண்ணதாசன் இயக்கியிருந்த ‘லாக் டவுன்’ என்ற படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா, இயக்குநர் கெளதம் மேனனின் குறும்படத்தில் நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. இது குறித்த வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா. அதில், 4K ஃபார்மெட்டில் எப்படி வீடியோ எடுப்பது என்பதை, வீடியோ காலில் கூறுகிறார் கெளதம். வீட்டிலிருந்தபடியே அதனை மொபைலில் படமாக்கி, கெளதமுக்கு த்ரிஷா அனுப்புவார் என்று தெரிகிறது. விரைவில் குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What a fun morning????Can’t wait to show you guys what we filmed????????
Thank you @menongauthampic.twitter.com/yt42CeI4nS
— Trish (@trishtrashers) May 1, 2020
தவிர, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய கெளதம் மேனன் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. இறுதியாக ‘பேட்ட' படத்தில் நடித்திருந்த த்ரிஷா, தற்போது ‘பரமபதம் விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘ராங்கி’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் பிஸியாக இருப்பது குறிப்பிடத் தக்கது.
எஸ்.பி.ஐ அதிகாரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் வங்கி ஊழியர்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.