Leo FDFS Trisha: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. தளபதி விஜய்யின் லியோ படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளை ஹவுஸ்ஃபுல் செய்தனர்.
லியோ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். கில்லி படத்துக்குப் பிறகு, திரிஷாவும் விஜய்யும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, லியோ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளதால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை திரிஷா லியோ திரைப்படத்தை வியாழக்கிழமை (அக்டோபர் 19) முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சென்னை ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்தார்.
திரிஷா தனது தாயார், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலருடன் ‘லியோ’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்த புகைப்படங்கள் திரிஷா ஃபேன் கிளப் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தில் திரிஷா நீல நிற ஜீன்ஸ், புது ஸ்டைலான வெள்ளை டி-ஷர்ட்டை அணிந்து அழகாக தெரிகிறார். வட்டமான சன்கிளாஸ் மற்றும் ஒரு கருப்பு பையுடன் திரிஷா தியேட்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
லியோ படத்தை முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்த திரிஷாவின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் திரிஷாவுக்கு ரசிகர்கள் தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் பொழிந்துள்ளனர்.
ஒரு ரசிகர் “என் தலைவன் என் தலைவி என்றென்றும் விஜய், திரிஷா மட்டும்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எல்லா சினிமா கதைகளும் 24 கோணங்களின் கதைகளுக்குள் அடக்கிவிடலாம் என்று கூறுகிறார்கள். அதாவது எந்த கதையும் புதிதல்ல என்பதுதான்.
லியோ திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் அதை இயக்கிய விதத்தில் லோகேஷ் கனகராஜ் தனது கை வண்ணத்தைக் காட்டியிருக்கிறார். லியோ படத்தில், பார்த்திபன் என்ற பார்த்தி (விஜய்) ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு காபி கடையை நடத்தி வருகிறார், மேலும், சத்யாவை (த்ரிஷா) இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு நாள் அவர் அந்தோனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன் சர்ஜா) ஆகிய இரக்கமற்ற ரவுடிகளால் தாக்கப்படுகிறார், அவர்கள் பார்த்திபனை அந்தோனியின் மகன் லியோ தாஸ் என்று கருதுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும்? பார்த்தி குழப்பத்தை எவ்வாறு கையாள்கிறார்? பார்த்திபன்தான் லியோ தாஸா? இந்தக் கேள்விகள்தான் படத்தின் கதை.
திரிஷா லியோ திரைப்படத்தை வியாழக்கிழமை (அக்டோபர் 19) முதல் நாள் முதல் காட்சியை (FDFS) சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“