/indian-express-tamil/media/media_files/2025/06/28/trisha-donate-mechanical-gaja-elephant-aruppukkottai-temple-virudhunagar-tamil-news-2025-06-28-16-40-29.jpg)
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவிலுக்கும், அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோவிலுக்கும், நடிகை த்ரிஷா மற்றும் ஒரு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து 'கஜா' என்ற பெயருடைய பிரம்மாண்ட இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சுமார் 3 மீட்டர் உயரம் மற்றும் 800 கிலோ எடை கொண்ட இந்த இயந்திர யானை, நிஜ யானையைப் போலவே தோற்றமுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த யானைக்கு, தலையும், காதுகளும், துதிக்கையும் அசையும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தண்ணீர் பீச்சும் அடிக்கக்கூடிய திறமை உடையதாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது.
ஜூன் 27, 2025 அன்று கோயிலில் நடைபெற்ற விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'கஜா'யை நேரில் பார்த்து மகிழ்ந்தனர். இந்த முயற்சி, உயிர் யானைகளை பயன்படுத்தும் வழக்குக்கு மாற்றாக, தொழில்நுட்பத்தின் மூலம் கோயில் நிகழ்வுகளை நடத்தும் முன்னோடியாக அமைந்துள்ளது.
விலங்கு நல ஆர்வலரான நடிகை த்ரிஷா, இந்த இயந்திர யானையை வழங்கியதன் மூலம், மனிதராலும், விலங்குகளாலும் எவ்வித சிரப்பும் ஏற்படாத வகையில் விழாக்கள் நடைபெற வேண்டும் என்பது தான் நோக்கம் எனத் தெரிவித்தார். அவர் PFCI (People for Cattle in India) அமைப்புடன் இணைந்து இந்த நவீன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, திரிஷாவிற்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்களும், விலங்கு நல ஆதரவாளர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கோயில் மரபையும் பாதுகாத்து, சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலத்தையும் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, மற்ற கோயில்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என வலியுறுத்தப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.