நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.
சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அந்த இரு திரைப்படங்களும் வெற்றியை தந்தது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“