/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-37.jpg)
Trisha reveals her look on new web series brinda
நடிகை த்ரிஷா போலீஸ் உடை அணிந்து நாய்களுடன் விளையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிருந்தா என்ற தெலுங்கு வெப் தொடர் மூலம் த்ரிஷா, OTT அறிமுகத்திற்குத் தயாராகி வருகிறார். இதில் த்ரிஷா போலீஸ் வேடத்தில் நடிக்கும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
காக்கி உடை அணிந்து இரண்டு நாய்களுடன் விளையாடும் புகைப்படத்தை, த்ரிஷா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு த்ரிஷா, சாமி, என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் போலீஸ் படங்களில் நடித்திருந்தாலும், அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.
சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட த்ரிஷா, இப்போது ஹைதராபாத்தில் பிருந்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். புதுமுக இயக்குனர் சூர்யா வாங்கலா இப்படத்தை இயக்குகிறார், சக்தி காந்த் கார்த்திக் மற்றும் தினேஷ் கே பாபு, இசை மற்றும் ஒளிப்பதிவைக் கையாள்கின்றனர். இந்த தொடர் சோனி எல்ஐவியில் (Sony LIV) ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
த்ரிஷா கடைசியாக பரமபதம் விளையாடு படத்தில் நடித்தார், இது நேரடியாக Disney+Hotstar இல் வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.
இந்நிலையில், இப்போது த்ரிஷா போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
2002 ஆம் ஆண்டில், மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா அறிமுகமானார். சமீபத்தில் த்ரிஷா திரையுலகில் 19 வருடங்களைக் கடந்தார். த்ரிஷா இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் உள்பட, அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில், சதுரங்க வேட்டை 2, ராங்கி மற்றும் கர்ஜனை போன்ற படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வரவிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த வராற்று புனைவில், த்ரிஷா இளவரசி குந்தவையாக நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.