/indian-express-tamil/media/media_files/LLvlMlIZBsrNPcSdfwqp.jpg)
லியோ படத்தில் விஜய், திரிஷா
Trisha tweets about Leo movie: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு அக்.13 தொடங்கிய நிலையில், நேற்றுவரை 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The world is my oyster🇦🇿🧿 pic.twitter.com/DUqjE3QTm9
— Trish (@trishtrashers) October 13, 2023
2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 2-வது படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கில்லி, குருவி, திருப்பாச்சி மற்றும் ஆதி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்த ஜோடி 5-வது முறையாக இணைந்துள்ளது.
❤️♾️🧿#Leo#LeofromOct19pic.twitter.com/HoTt9eAlqz
— Trish (@trishtrashers) October 14, 2023
இதனால் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ள திரிஷா, ரெடியா எனக் கே்டடுள்ளார்.
இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். லியோ படத்தில் கேஜிஎஃப்: 2 மூலம் கன்னடத்தில் அறிமுகமான பிறகு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது லியோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
Ready aaaaa?😈 pic.twitter.com/Sp8hupqiBK
— Trish (@trishtrashers) October 14, 2023
அவருடன் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.