நேற்று டிடி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நடிகை திரிஷாவிடம், “ எதாவது ஒரு ஆங்கில சீரியலின் கதாப்பாத்திரத்தில் உங்களை நடிக்கச் சொன்னால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்.” என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த திரிஷா, “கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரீஸில் இருந்து கலீஸி ரோல் செய்ய விரும்புவேன்.” என்றார்.
Hi trishaaaaa my Love tel me Which English series character u identify urself with? #askT @trishtrashers n ya I also dropped by to tel u I respect u for ur work n the person ur.. stay hapy ????
— DD Neelakandan (@DhivyaDharshini) May 2, 2018
Awwww myy dd ???????????? thank you. I wana play Khaleesi from GOT ???????????? https://t.co/o7f08Io1F5
— Trish (@trishtrashers) May 2, 2018
இந்தக் கேள்வியையும் பதிலையும் பார்த்த நெட்சன்கள் அதிர்ச்சியில் உரைந்து போனார்கள். திரிஷா ரசிகர்கள் இதற்கு ஆதரவு அளித்தாலும், கலீஸியின் ரசிகர்கள் ‘ஏன் இந்த விஷப்பரீட்சை’ என்று கேட்கின்றனர்.
பொதுவாகவே ஆங்கில சீரீஸ்களுக்கு வரவேற்பு அதிகம். அதில் உலகையே திருப்பிப் போட்ட ஆங்கிய சீரீஸ் தான் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்”. இதில் கலீஸி என்று அழைக்கப்படும் டெனேரஸ் டார்கேரியன் கதாப்பாத்திரத்தை எமீலியா க்ளார்க் நடித்துள்ளார். மூன்று ராட்சஸ டிராகன்கள் கலீஸியின் குழந்தைகள். எனவே இந்தக் கதாப்பாத்திரம் “மதர் ஆஃப் டிராகன்ஸ்” என்று பிரபலமாக அழைக்கப்படும். அந்த சீரீஸில் வரும் வீரமிக்க முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒன்றான கலீஸியின் ரோலில் திரிஷா நடிக்க ஆசைப்படுகிறார் என்று அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
நெட்டிசன்கள் சிலர் இந்தப் பதிவை படித்தவுடன் யார் கால் டிராகோ என்று கேட்டனர். கலீஸியின் மறைந்த கணவர் கதாப்பாத்திரம் தான் கால் டிராகோ. இந்தக் கேள்வியை கேட்ட ரசிகர்களுக்கு சிலர் “ரானா டக்குபதி தான் கால் டிராகோ. வேறு யார்.” என்று பதிலளித்தனர்.
எது எப்படியோ, டிடி கொளுத்திப்போட்ட கேள்வியில் சிக்கிக்கொண்ட திரிஷாவுக்கு நெட்டிசன்களிடம் விமர்சனங்கள் வந்தாலும், வரவேற்புகளே அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது.