நடிகை த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசையான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பது ஒருவழியாக நிறைவேறியது.
நடிகை த்ரிஷாவின் ஆசை:
காலா படத்திற்கு பிறகு ரஜினி ரசிகர்கல் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 2.0. ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளிவரவிருக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்லா, டேராடூன் பகுதியில் நடைப்பெற்றது. இந்த படத்தில் 40 நாட்கள் மட்டுமே ரஜினிகாந்த் கால்ஷீட் ஒதுக்கியதாகவும் தகவல் வெளியானது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் - த்ரிஷா
படத்தில் முதன்முறையாக நடிகர் ரஜினியுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு தவிர, தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
இதுக்குறித்து பல பேட்டிகளில் நடிகை த்ரிஷா வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் ஒருவழியாக த்ரிஷாவின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இந்த தகவலை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்வீட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.
இந்த தகவலை கேட்ட த்ரிஷா ரசிகர்கள், அதை கொண்டாட தொடங்கியுள்ளனர். சிம்ரன் - த்ரிஷா,இருவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் மட்டும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது.