/tamil-ie/media/media_files/uploads/2021/08/bk-pandian-stores.jpg)
இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில், சன் டிவி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் முன்னிலையில் இருந்து வருகின்றன.
சின்னத்திரை டிஆர்பி ரேட்டிங்கில், இந்தவாரம் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதிக்கு லட்சுமி கண்ணம்மாவோட குழந்தை என்று தெரிந்து, அதை நிரூபிக்க லட்சுமியை தன் கூடவே தங்க வைத்துள்ளான். லட்சுமியை பிரிந்து வாடும் கண்ணம்மா, எப்படி லட்சுமியை அழைத்து வரப்போகிறாள் என கதை சுவாரஸ்மாக போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் வில்லி வெணபா என்ன செய்யப்போகிறாள், அஞ்சலிக்கு என்ன ஆகும் என இந்த சீரியல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலில், பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும், வில்லி வெண்பாவாக ஃபரினாவும் நடித்து வருகின்றனர்.
டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. கூட்டுக்குடும்பத்தை மையமாக கொண்ட கதையில், அண்ணன் மூர்த்தி, தன் தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளமால், தம்பிகளை மனைவி தனத்துடன் சேர்ந்து, தங்கள் குழந்தை களாக வளர்த்து வந்தார். இரண்டு தம்பிகளுக்கு திருமணம் ஆன நிலையில், தனம் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், இன்னொரு பக்கம் கடைசி தம்பியான கண்ணன், காதலி ஐஸ்வர்யாவை வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். இதனால் கண்ணன் அடுத்து என்ன செய்யப்போகிறான் என கதை சென்று கொண்டிருக்கிறது.
அடுத்ததாக மூன்றாம் இடத்தில் சன் டிவி சீரியலான ரோஜா சீரியல் உள்ளது. அனு உண்மையில் கோமாவில் இருக்கிறாளா, என்பதை கண்டுப்பிடிக்க ரோஜா செய்யும் முயற்சிகள் என இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் சிப்பு சூர்யன் மற்றும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நான்காம் இடத்தில், விஜய் டிவியின் மற்றொரு சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இதில், குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் குடும்பங்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாம் இடத்திலும் விஜய் டிவி சீரியலே உள்ளது. ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஆல்யா மானசா நடிக்கும் ராஜா ராணி 2, சீரியல் 5ஆம் இடத்தில் உள்ளது. சரவணனின் தங்கையின் திருமணம், அதில் வில்லி அர்ச்சனா செய்யும் குழப்பங்கள் என சுவாரஸ்மாக கதை நகர்ந்து வருகிறது.
டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5ல் விஜய் டிவி சீரியல்கள் 4 இடங்களைப் பிடித்து தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.