மாமா‌ மகளை கரம் பிடித்த டி.டி.எஃப்.வாசன்? போட்டோ இல்லாத ஸ்டோரியால் குழப்பத்தில் நெட்டிசன்கள்!

பிரபல பைக் சாகசர் டிடிஎஃப் வாசன் தனது மாமா மகளை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பைக் சாகசர் டிடிஎஃப் வாசன் தனது மாமா மகளை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai court order bail for YouTuber TTF Vasan for reckless driving Case Tamil News

யூடியூப் உலகில் தனது பைக்கிங் சாகசங்களால் புகழ்பெற்றவர் டிடிஎஃப் வாசன். குறுகிய காலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் சிக்கினார். அதிவேகமாக பைக் ஓட்டியதற்காகவும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காகவும் இவர் கைது செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு இழந்தார்.

Advertisment

இருப்பினும், சமீபகாலமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல், தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் வாசன். தற்போது அவர், 'ஐபிஎல்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், வாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் பைக்கிங் செய்துகொண்டிருந்தபோது, அவரது காதலி அவசரமாகத் திரும்பும்படி அழைத்ததால் அவர் ஊருக்கு வந்ததாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், தனது காதலியிடம் "நாளை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருக்கிறாயா?" என்று கேட்க, அவரும் "நிச்சயமாக" என்று பதிலளிக்கிறார். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பேசிக்கொள்கின்றனர்.

ttf vasan

அப்போது, அந்தப் பெண் வாசனைக் பார்த்து, "பயப்படுகிறீர்களா?" என்று கேட்கிறார். அதற்கு வாசன், "எனக்கு பயம் என்பதே கிடையாது" என்று பதிலளிக்கிறார். அதேசமயம், குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும், அதனால்தான் யோசிப்பதாகவும் வாசன் கூறியுள்ளார். தனக்கு தந்தை இல்லாததால் மாமாவைத்தான் தந்தை போல நினைத்ததாகவும் ஆனால் சூழ்நிலை காரணமாக சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இந்த வீடியோவை அவர் நேற்று பதிவிட்ட நிலையில் தனது மாமன் மகளை அவர் இன்று திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் முகத்தை மறைத்தபடி திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணம் கேரளாவில் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாசனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். "உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், கவலைப்படாதீர்கள்" என்று பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Indian Marriage TTF Vasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: