20 வயதான நடிகை துனிஷியா சர்மா, ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சனிக்கிழமை (டிச.24) தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டின் பேரில் சக நடிகரான ஷீசன் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நடிகை துனிஷியா சர்மாவின் தாயார வனிதா அளித்த புகாரில், “தனது மகளும் ஷீசன் கானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாள்களும் முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். என் மகள் மனம் உடைந்து காணப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகர் ஷீசன் கான் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
28 வயதான ஷீசன் கான், மேலும் சிலரிடமும் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து வந்துள்ளார்.
இது குறித்து போலீசார், “நடிகையின் உடற்கூராய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தெரியவரும். ஷீசன் கானிடமும் விசாரணை நடைபெற்றுவருகின்றது” என்றார்.
இதற்கிடையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், “இது லவ் ஜிகாத் வழக்கா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். தொடர்ந்து அவர், “குற்றம் செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள். துனிஷியாவின் குடும்பத்துக்கு 100 சதவீதம் நீதி கிடைக்கும்” என்றார்.
சண்டிகரை சேர்ந்த இளம் நடிகையான துனிஷியா சிறு வயதில் இருந்தே சின்னத்திரையில் நடித்துவருகிறார். இவர் தனது கேரியரை மகாராணா பிரதாப் சிங், பாரத தேசத்தின் வீர புத்திரன் என்ற தொடரில் இருந்து தொடங்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
(எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. எவரேனும் மன அழுத்தம் போல் உணர்ந்தால் கீழே குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.)
-
தற்கொலை தீர்வல்ல
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/