லதா ராவ்க்கு ஐஸ் வைத்த ராஜ் கமல்; சீரியல் ஜோடியின் காமெடி கலாட்டா
டிவி சீரியல் ஜோடியான ராஜ் கமல் - லாதா ராவ், சூர்யா - ஜோதிகா நடித்த படத்தின் பாடலுக்கு செய்த டிக்டாக் காமெடி கலாட்டா வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Raj kamal latha rao, tv serial actor raj kamal, sun tv serial actor raj kamal, sun tv serial actress latha rao, ராஜ் கமல், லதா ராவ், வரைல் வீடியோ, டிவி சீரியல் ஜோடி, தமிழ் வீடியோ செய்திகள், actresa latha rao, Raj kamal latha rao tiktok video, Raj kamal latha rao viral video, Raj kamal latha rao video, tamil viral news, tamil video news, tamil viral video news, latest news in tamil
டிவி சீரியல் ஜோடியான ராஜ் கமல் - லாதா ராவ், சூர்யா - ஜோதிகா நடித்த படத்தின் பாடலுக்கு செய்த டிக்டாக் காமெடி கலாட்டா வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Advertisment
தொலைக்காட்சி சீரியல் நடிகர் ராஜ் கமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் அதே சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சக சீரியல் நடிகை லதா ராவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் லாரா, ராகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டிவி சீரியல்களில் கலக்கிய ராஜ் கமல், பச்சகுதிரை, சரோஜா, நவீன சரஸ்வதி சபதம், லிங்கா, சண்டி குதிரை ஆகிய படங்களில் நடித்து சினிமாவிலும் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisement
அதே போல, தமிழ், தெலுங்கு என 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்த லதா ராவ், ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில், வடிவேலுக்கு மனைவியாக நடித்து கலக்கினார். அதன் பிறகு, கன்னட படம் ஒன்றில் நடித்தார்.
சீரியல் ஜோடியான ராஜ் கமல் - லதா ராவ் ஜோடி, டுவிட்டர், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஊடகங்களில் ரொம்ப ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லதா ராவ் டுவிட்டரில் ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா - ஜோதிகா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற ‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’ பாடலைப் பயன்படுத்தி ஒரு காமெடி கலாட்டா செய்துள்ளனர்.
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்ற பாடலில் வரும் பலகோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய் என்ற வரியை லதா ராவ் பாடுகிறார். அதற்கு, ராஜ்கமல் வடிவேலு குரலில் “ஊரு பூரா பொண்ணு கேட்டேன். ஒரு நாதாரியும் தரமாட்டேன்னுட்டான். அதான் காரணம்” என்று கூறி கலாய்க்கிறார்.
ராஜ் கமலின் டயலாக்கை கேட்டை லதா ராவ் கோபாமாக கோவை சரளாவின் குரலில் ஏது என்று கேள்வி கேட்க, ராஜ்கமல் உடனே அந்த பாடலில் வரும் நான் தேடும் பெண்ணாக நீதிதானே தோன்றினாய் என ஐஸ் வைது தலையில் தட்டுகிறார். கணவன் மனைவி இருவரும் டூயட் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, லதா ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை செலக்ட் பண்ண இதான் காரணமா? என்று குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"