திருமணம் சீரியல் ரீல் ஜோடிக்கு ரியல் திருமணம்: மகிழ்ச்சி போட்டோஸ்

திருமணம் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய இந்த புதுமணத் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Sidhu Sid Shreya Anchan marriage, Sidhu Sid weds Shreya Anchan, Sidhu Sid, Sidhu Shreya, Shreya Anchan, Thirumanam serial, RajaRani serial, திருமணம் சீரியல், சித்து சித், ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் ஸ்ரேயா அஞ்சன் திருமணம், ராஜா ராணி 2, விஜய் டிவி, Raja Rani2 serial, Saravanan, SanJan, Santhosh Janani, Vijay Television, Colors Tamil, SS Thirumanam, tamil tv serial, Sidhu Sid Shreya Anchan marriage photos goes viral

தமிழ் டிவி சீரியல்களில் ரீல் ஜோடியாக நடித்து வந்த சின்னத்திரை நட்சத்திரங்களான நடிகை ஸ்ரேயா அஞ்சன் – நடிகர் சித்து சித் திருமணம் சென்னையில் நடைபெற்றதன் மூலம் ரியல் ஜோடியாகி உள்ளனர். ஸ்ரேயா – சித்து திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் ரசிகர்கள் சினத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிகர் சித்து சித் – நடிகை ஸ்ரேயா அஞ்சன் திருமணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமண விழாவில், நடிகை ஸ்ரேயா பளிச்சென்று இளஞ்சிவப்பு நிற சேலையிலும் சித்து வேஷ்டி சட்டையிலும் இருந்தனர்.

ரியல் ஜோடிகளான சின்னத்திரை நட்சத்திரங்கள் சித்துவும் ஸ்ரேயாவும் தங்கள் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் நடிகர் சித்து சித், சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஸ்ரேயா ஜனனி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரியை ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது. திருமணம் சீரியல் கலர்ஸ் தமிழ் டிவியில் 2018 முதல் 2020 வரை சுமார் 500 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா அஞ்சன், அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இருவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் சித்து சித் மற்றும் நடிகை ஸ்ரேயா அஞ்சன் இருவரும் காதலித்து வந்த நிலையில், சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமண விழாவில், தமிழ் சின்னத்திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய இந்த புதுமணத் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சித்து – ஸ்ரேயா-வின் சின்னத்திரை நண்பர்கள் நக்ஷத்ரா நாகேஷ், அருண், வினோத் பாபு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சித்து சித் – ஸ்ரேயா அஞ்சன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tv serial actors sidhu sid shreya anchan gets marriage

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com