New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/haripriya-simran.jpg)
Serial actress News : சின்னத்திரை பிரபலம் ஹரிப்பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் சிறந்த பரிசை அளித்துள்ளனர்.
சின்னத்திரை பிரபலம் ஹரிப்பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் சிறந்த பரிசை அளித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. பிரியமானவள் தொடரில் இவர் நடித்த 'இசை' கதாபாத்திரம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரனை ஹரிப்பிரியாவுக்கு மிகவும் பிடிக்குமாம். இதை உணர்ந்த அவர் நண்பர்கள், ஹரிப்பிரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மிகவும் பிடித்த சின்ம்ரனைசந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்த சந்திப்பை சற்றும் எதிர்பாராத ஹரிப்பிரியா, மகிழ்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், " மிக்க நன்றி ஆங்கர் அஷார் .. என்னை உற்சாகப் படுத்தும் விஷயங்கள் எது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் ..." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.