மாமியாருடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆண்டு கணக்கில் ஒரே சீரியலில் நடிப்பதால் காதல், கல்யாணம் என ஒரே குடும்பமாக மாறுவது சகஜமான விசயம்தான். வம்சம் தொடரில் ரோஜாவாக நடித்து கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர் கொடுக்கும் ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம், காதல் திருமணம்தான் என்றாலும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயஸ்ரீ கரம்பிடித்துள்ள நடிகர் ஈஸ்வர் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ளார். ஜெயஸ்ரீயும் ஈஸ்வரும் காதலித்து இப்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் , மாமியாருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி சென்னை அடையார் போலீஸ் ஸ்டேசனில் ஜெயஹ புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, போலீசார், கணவர் ஈஸ்வர் மற்றும் மாமியாரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்