விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் கர்ப்பாமாக இருக்கிற நிலையில், கணவருடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
Advertisment
சன் டிவியில் 2007ம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு சீரியலில் நடிக்கத் தொடங்கிய நடிகை ஸ்ரீதேவி அசோக், இந்த 14 ஆண்டுகளில் சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என கிட்டத்தட்ட எல்லா முன்னணி டிவிகளிலும் 25 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். அதோடு, 2 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, ஸ்ரீதேவி அசோக் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலிலும் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி அசோக் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி அசோக் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கிற ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் சேர்ந்து க்யூட்டாக நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் சிரமப்படாமல் எளிய அசைவுகளுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும்போது, இப்படி நடனம் ஆடலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோ பற்றி ஸ்ரீதேவி அசோக் குறிப்பிடுகையில், “கர்ப்பமாக இருக்கும்போது, நடனம் ஆடினால் குழந்தையை பாதிக்குமா? இதற்கு மிக குறுகிய விடை இல்லை என்பதுதான். கர்ப்பமாக இருக்கும் நீங்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் உடற்பயிற்சிகளை முற்றிலும் தவிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் நடனம் ஆடுவது முற்றிலும் பாதுகாப்பானது. ஆனால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்ய முன்வந்திருக்க வேண்டும். மிகவும் குறைவான அசைவுகளை தேர்வு செய்ய வேண்டும். அதாவது நடனம் இது மிகக் குறைவான அசைவுகள் கொண்ட ஸ்டைல் நடனங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் எளிய அசைவுகளுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் இருந்து லைக்குகளை அள்ளி வருகிறது.