Advertisment

திருமணமான 2 மாதங்களில் சீரியல் ஜோடி பிரிவு ஏன்? நடிகர் கொடுத்த விளக்கம்

சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா - விஷ்ணுகாந்த் காதலித்து திருமணம் செய்துகொண்ட 2 மாதங்களில் பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TV Serial Couple Vishnukanth and Samyuktha separation, திருமணமான 2 மாதங்களில் சீரியல் ஜோடி பிரிவு ஏன், நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கம், விஷ்ணுகாந்த் கொடுத்த விளக்கம், சம்யுக்தா - விஷ்ணுகாந்த் பிரிவு, TV Serial Couple Vishnukanth and Samyuktha separation, social media Vishnukanth answer

சீரியல் ஜோடி விஷ்ணுகாந்த் - சம்யுக்தா

சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா - விஷ்ணுகாந்த் காதலித்து திருமணம் செய்துகொண்ட 2 மாதங்களில் பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினி', 'கோகுலத்தில் சீதை', என்றென்றும் புன்னகை', சிப்பிக்குள் முத்து' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் நடிக்கும் போது அவருடன் நடித்த சம்யுக்தா மீது காதல் ஏற்பட்டது. இவரை சம்யுக்தாவும் காதலிப்பதாக அவருடைய பிறந்த நாளில் கூறினார். இருவரும் சில மாதங்கள் காதலித்தனர். பிறகு தங்கள் காதல் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர் விஷ்ணு-சம்யுக்தா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்திச் சென்றனர்.

விஷ்ணு - சம்யுக்தா திருமணம் நடந்து 2 மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. திருமணத்தின் போது ஜோடியாக எடுத்துப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நீக்கிவிட்டனர்.

இது குறித்து ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, “இந்தச் செய்திக்கு நான் எப்படி ரியாக்ட் செய்யறதுன்னே தெரியல. எங்களுக்கிடையில் பிரச்னை இருக்கு. ஆனா கல்யாணமான புதுசுலயே அதாவது இவ்ளோ சீக்கிரத்துலயே என்னைப் பத்தி இப்படியொரு செய்தி வெளிவந்து வைரலாகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அதேநேரம் இந்தச் செய்தி தொடர்பா 'விளக்கம் தர்றேன்'னு எதையும் பேசவும் நான் இப்ப விரும்பலை. எல்லா விஷயங்களும் வெளியில வர்றதுக்குன்னு ஒரு நாள் இருக்கும். அந்த நாளில் வந்துட்டுப் போகட்டும்” என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment