ட்விட்டரை “ரூல்” செய்த விஜய் : மாஸ்டருக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ் ட்வீட் எது தெரியுமா?

அதிக அளவு கவனத்தையும் கருத்துகளையும் பெற்ற ட்வீட்டாக அமிதாப் பச்சனின் கொரோனா நோய் தொற்று உறுதி ட்வீட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay
விஜய்

The most Retweeted Tweet of 2020 : இந்த ஆண்டு ட்விட்டரில் அரங்கேறிய முக்கியமான விசயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறது ட்விட்டர் இந்தியா. அதிகம் லைக், அதிகம் விவாதிக்கப்பட்டது என்று வரிசையில் அதிகமாக ரிட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக விஜயின் செல்ஃபி புகைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்திற்காக நெய்வேலி சென்றிருந்த விஜயின் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணைக்காக விஜய் நேரிலும் அழைக்கப்பட்டிருந்தார். விசாரணை முடித்துவிட்டு திரும்பி வந்த அவர் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகளை முடித்தார். பின்னர் அவரை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு கைகாட்டிய அவர் பேருந்து ஒன்றில் ஏறி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செஃல்பி இந்த ஆண்டில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட புகைப்படமாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிர்வாகம். கிட்டத்தட்ட 1 லட்சத்தி 45 ஆயிரம் நபர்கள் இந்த ட்வீட்டை ஷேர் செய்துள்ளனர். அதே போன்று அதிகமாக லைக்குகள் வாங்கிய புகைப்படமாக அனுஷ்கா சர்மா/விராட் கோலி தங்களின் முதல் குழந்தையின் வருகையை அறிவித்திருந்த புகைப்படமாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

அதிக அளவு கவனத்தையும் கருத்துகளையும் பெற்ற ட்வீட்டாக அமிதாப் பச்சனின் கொரோனா நோய் தொற்று உறுதி ட்வீட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Twitter india vijays thank you neyveli is most retweeted tweet of 2020

Next Story
அரசியல் பயணத்திற்கு முன்பு ’அண்ணாத்த’ படபிடிப்பில் தீவிரம் காட்டும் ரஜினி!Rajinikanth in Annatthe Shooting
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com