சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அலுவலகங்கள் முன்பு நிற்க வேண்டியதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களைபற்றி மக்களை பேச வைத்தாலே போதும். அவர்களை தேடி வாய்ப்புகள் குவியும். மக்கள் இவர்களை பற்றி நல்லதாக பேசுகின்றனரா, அல்லது அவர்களை விமர்சனம் செய்கின்றனரா என்பது அவசியம் இல்லை.
ஆனால், அதனால் நிலைத்த வெற்றியை பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இணையத்தில் துன்புறுத்தல், கேலி, கிண்டல் என அவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் சம்பவங்களும் உண்டு.
அப்படி, சமூக வலைத்தளங்கள் மூலம் இரண்டே நாட்களில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
சர்ஜூன் கே.எம்.:
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணின், திருமணத்தை கடந்த காதல் வாழ்க்கை குறித்து பேசும் ‘லஷ்மி’ குறும்படத்தை இயக்கியவர். வெளியானது முதலே இந்த படம் ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதாக பலரும் விமர்சித்தனர். இப்போது அவர் அடைந்திருக்கும் உயரம் என்ன தெரியுமா? நயன்தாரா நடிக்கும் திகில் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் என்ன சொல்கிறார்?
“லஷ்மி குறும்படத்திற்கு பிறகு பலரும் என்னை இணையத்தளத்தில் துன்புறுத்தல் செய்தனர். கேலி செய்தனர். சமூக வலைத்தளங்கள் மிக வலுவனாது. குறும்படம், பாடல் என எதுவாக இருந்தாலும், அவை குறித்து சமூக வலைத்தளங்களின் தாக்கம் பெரிதாகவே இருக்கும்”, என கூறினார்.
“எனக்கு இப்போது பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன”, எனக்கூறும் சர்ஜூனுக்கு இவை சமூக வலைத்தளங்கள் கொடுத்த பிரபலத்தாலேயே இவற்றில் பாதியை அடைந்திருக்கிறார்.
ஆரவ்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா காதலை சொல்லியதாலும், அந்நிகழ்ச்சியில் வெற்றியை பெற்றதாலும் பலரது உள்ளங்களை தொட்டிருக்கிறார்.
“சமூக வலைத்தளங்கள் லாபகரமானவை. இணையத்தள தொடர்கள் பலவற்றை இப்போது நெட் ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றில் வெளியிட முடிகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பு. இணையத்தில் நல்ல கதைகளை சொல்ல முடியும். பல நட்சத்திரங்கள் உள்ளனர்.”, என தெரிவித்தார். இளைஞர்கள் வழக்கமான முறையில் வாய்ப்புகளை தேடாமல் சமூக வலைத்தளங்கள் மூலமே தேட முடிகிறது. இது மிகவும் கடினமாக இருந்தது. நாம் செய்யும் ஒரு செயல், சொல்லும் வார்த்தை இங்கு ட்ரெண்ட் ஆகும். அது போய்ச்சேரும் இடம் பெரியது”.
லஷ்மி பிரியா சந்திரமௌலி:
சர்ச்சைக்குரிய லஷ்மி குறும்படத்தின் கதாநாயகி லஷ்மி பிரியா சந்திரமௌலி. “அந்த படத்தால், என்னுடைய மற்ற படங்களையும் மக்கள் கவனித்தனர். இப்போது நடிகையாக பலருக்கும் என்னை முன்பை விட தெரிந்துள்ளது. என்னுடைய அடுத்த படம் ரிலீஸானபோது என்னை லஷ்மியாகத்தான் மக்கள் அறிந்தனர். பொது இடத்திலும் அப்படித்தான்”, எனக்கூறும் லஷ்மி, இதனால் நல்ல பட வாய்ப்புகள் வரும் என்று அர்த்தமில்லை எனவும் தெரிவிக்கிறார்.
அதேபோல், பிக் பாஸ் மூலம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நடிகை ஓவியா, கண்ணசைவு மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோரும் சமூக வலைத்தளம் மூலமாகவே இந்த இடத்திற்கு சில நாட்களிலேயே வந்துள்ளனர் எனலாம்.
”சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி மூலமாக வெள்ளித்திரைக்கு வந்ததால், தன் ரசிகர்களுடன் அவர் மிக நெருக்கமாக உள்ளார். ஆர்.ஜே.பாலாஜிக்கு ட்விட்டரில் 3 லட்சம் பேர் பின்தொடர்வதால், அவரால் இந்த இடத்திற்கு வர முடிந்திருக்கிறது.”, என, ப்ளூ ஓஷன் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமியின் நிறுவனர் தனஞ்செயன் கூறுகிறார்.
அதேபோல், ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சென்சேஷனை உருவாக்க, மோஷன் போஸ்டர்ஸ், டீஸர்ஸ், சிங்கிள் டிராக் ஆகியவை வெளியிடப்படுகிறது.
நன்றி: ’தி இந்து’ ஆங்கிலம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.