scorecardresearch

ஷிவானி ஷாக்… கமல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேலும் 2 சீரியல் நடிகைகள்!

Two more serial actresses joins vikram movie shivani shocks: ஷிவானி மட்டுமில்லை, விஜய்சேதுபதிக்கு மேலும் இரண்டு ஜோடிகள்; கமலின் ‘விக்ரம்’ பட அப்டேட்

ஷிவானி ஷாக்… கமல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேலும் 2 சீரியல் நடிகைகள்!

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில், ஷிவானியுடன் மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’கைதி’, ‘மாஸ்டர்’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய்சேதுபதியும் நடித்து வருகின்றனர்.

காரைக்குடி பகுதியில் பிரமாண்ட செட் அமைத்து ‘விக்ரம்’ படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சீரியல் நடிகையும் பிக் பாஸ் பிரபலமும் ஆன ஷிவானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஷிவானியுடன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய்சேதுபதி 3 ஜோடிகள் என தெரிகிறது.

விஜய் டிவியின் முன்னனி நடிகையான மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி தான் அந்த இரண்டு சீரியல் நடிகைகள். இவர்கள் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் ஷிவானி தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

’விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு மூன்று ஜோடிகள் என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மைனா விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வருவதோடு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதேபோல் மகேஸ்வரி சின்னத்திரை மட்டுமல்லாமல், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Two more serial actresses joins vikram movie shivani shocks