கத்தியுடன் வீட்டில் இறங்கிய மர்மநபர்கள்: பயத்தில் ஓடிய நடிகை சோனா காயம்; போலீஸ் விசாரணை!

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர்.

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
SOna Ac

மதுரவாயலில் உள்ள நடிகை சோனா வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட் படங்களில் குத்தாட்ட பாடல்களால் புகழ் பெற்றவர். இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28 வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர் இருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர்.

அவர்களைப் பார்த்து நடிகை சோனா கூச்சலிடவே மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் சோனா தப்பி தப்பி செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து சோனா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கத்தியை காட்டி மிரட்டிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: