U-Turn Box Office Collection Day 1 : சமந்தா நடிப்பில் நேற்று வெளியான யுடர்ன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. சமந்தா இம்முறை தனது கணவர் நாகசைதன்யா உடன் நேருக்கு நேர் மோதினார்.
U-Turn Box Office Collection Day 1: சமந்தா தோல்வி!
விநாயர் சதுர்த்தி ஸ்பெஷலாக நேற்று இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரைக்கு வந்தன. சீமராஜா, யுடெர்ன் ஆகிய இரண்டு படங்களின் எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் ட்ரெய்லர் முதலே அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தன்போதும் வசூல் ரீதியாக சீமராஜா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்று சிவகார்த்திகேயன் படவரிசையில் புதியதொரு சாதனையை செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சமந்தாவிற்கு தான். காரணம், யுடெர்ன், சீமராஜா இரண்டிலுமே சமந்தாத்தான் கதாநாயகி. சீமராஜாவில் ஆட்டம், பாட்டம் என வந்து போன சமந்தா, யுடெர்னில் தனிகாட்டு ராணியாக நடிப்பில் பின்னியெடுத்துள்ளார்.
படத்தும் அனைத்து தரப்பிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில், சமந்தாவில் யுடெர்ன் படம், முதல்நாளில் 60 லட்சங்களை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது.ஆரம்பத்தில் சிவகார்த்தியேகனின் படத்திற்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்ததால் யுடெர்ன் படத்திற்கு குறைவான ரசிகர்களே சென்றனர்.
1st Day Box Office Collection of U-Turn Movie
ஆனால், படத்தின் விமர்சனம் சீமராஜாவையே மிஞ்சியதால் ரசிகர்கள் யுடெர்ன் எடுத்து சமந்தாவை திரையில் காண முடிவெடுத்துள்ளன. த்ரில்லர் மற்றும் ஹாரர் படவரிசையில் சமந்தாவில் யுடெர்ன் படமும் நல்லதொரு பெயரை வாங்கியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா நடித்துள்ள ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நேற்று தெலுங்கில் வெளியாகியது. இந்த படத்தில் வசூல் முதல் நாளில் உலகம் முழுவதும் 8 முதல் 10 கோடியை தாண்டியுள்ளது. கணவருடன் முதன்முறையாக மோதிய சமந்தா இம்முறை பாக்ஸ் ஆபிஸில் தோல்வி கண்டார்.
இருப்பினும் படத்தில் சமந்தாவின் நடிப்பு மற்றும் அவரின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.