U-Turn Box Office Collection Day 2: சமந்தா பக்கம் வீசும் வெற்றி காற்று.. சீமராஜாவுடன் வசூலில் போட்டிப்போடும் யுடர்ன்!

U-Turn Movie Box Office Collection Day 2: பிரித்து காய் நகர்த்துவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

U-Turn Box Office Collection Day 2: சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யுடர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வசூல் ரீதியாகவும் தற்போது திரையரங்குகளில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

U-Turn Box Office Collection Day 2: சீமராஜாவுக்கு போட்டியாக யுடர்ன்!

திருமணம் ஆன பின்பு திரையுலகில் தங்களின் நடிப்பை தொடர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையானவர் நடிகை சமந்தார். குடும்பம்  பிளஸ் சினிமா என்று  பேலன்ஸாக இவர் பிரித்து காய் நகர்த்துவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டு தெலுங்கானா மருமகளான சமந்தா இளைஞர்களுக்கு  ஃபேவரெட். திருமணம் ஆன பின்பு சம்மு, சம்மு என்று ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு ரசிகர்கள் அதிகம்.  திருமணத்திற்கு பிறகு தமிழில் வெளியான சமந்தாவின் இரும்புத்திரை சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்நிலையில்   விநாயகர் சதுர்த்தி  அன்று சமந்தா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.  அவரின் நடிப்பில்   சீமராஜா, யுடர்ன் என இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன.  சீமராஜா திரைப்படம் விமர்சனம் ரீதியாக பின்னடைந்தாலும் வசூல் ரீதியாக இமாலய வெற்றியை  ருசி பார்த்துள்ளது.

சீமராஜாவின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி  பாக்ஸ் ஆபிஸை திணற வைத்துள்ளது. அந்தவரிசையில் தற்போது சமந்தாவின் யுடர்ன் படமும் இணைந்துள்ளது. யுடர்ன் திரைப்படத்தின் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கியுள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள் யுடர்ன் பக்கம் ஒதுங்க ஆரம்பித்துள்ளன.  இதனால் யுடர்ன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தின் 2 ஆவது நாள் வசூல் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது.  கடந்த 13 ஆம் தேதி வெளியானயுடர்ன் திரைப்படம் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 7.88 கோடியை வசூல் செய்துள்ளது.

U-Turn Box Office Collection Day 2:, 2nd Day Box Office Collection of U-Turn Movie

இம்முறை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுடன் பாக்ஸ் ஆபிஸில் மோதினார். ஆனால் சமந்தாவை  ஓரங்கட்டி இம்முறை நாகசைதன்யா தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பில் வெளியான  ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படம் தெலுங்கில் பட்டையை கிளப்பியுள்ளது.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close