நடிகை சமந்தா நடிப்பில் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள யூ டர்ன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
Advertisment
யூ டர்ன் ! ↩ படத்தின் டிரெய்லர்:
2016ம் ஆண்டு கன்னட மொழியில் யூ டர்ன் என்ற படம் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பவன் குமார் இயக்கியிருந்தார். தற்போது அதே படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்குகிறார். இரண்டு மொழிகளிலுமே சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
Very happy to present to you the trailer of #UTurn - https://t.co/cELWhnBO5H@Samanthaprabhu2 always takes the path less taken and succeeds! And this time is no different ????????????
Kudos and best wishes to Pawan and the whole team..
ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி சிலர் யூ டர்ன் எடுக்கிறார்கள். மற்றவர்களின் அலட்சியத்தின் காரணமாக ஒரு தாய் மகள் இறந்து போகிறார்கள். இந்த மரணத்திற்கு பிறகு ஏற்படும் விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக வைத்தே இப்படத்தின் கதை கடக்கிறது.
கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. கன்னடம் மற்றும் மலையாளாத்தில் அதிக வசூலை குவித்த இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்குகிறார் பவன் குமார். இதனை அடுத்து இந்தியிலும் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் விரைவில் திரையரங்குகளை எட்டும் என்ற செய்தியினால் சமந்தா கணவர் நாக சைதன்யா மகிழ்ச்சியோடும் ஆர்வத்துடனும் இருக்கிறார்.