scorecardresearch

ஆக்ஷன் த்ரில்லரில் அசத்தினாரா உதயநிதி? கலகத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்

தடையற தாக்க, மீகாமன், மற்றும் தடம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் கலகத் தலைவன்

ஆக்ஷன் த்ரில்லரில் அசத்தினாரா உதயநிதி? கலகத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் படம் இன்று வெளியாகியுள்ளது.

தடையற தாக்க, மீகாமன், மற்றும் தடம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில், நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரன் பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சமூக அக்கரையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியுள்ளதாக படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினருடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார். இதனிடையே பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் முதல்காட்சியை தொடங்கி வைத்து படம் பார்த்துள்ளனர்.

மேலும் கலகத் தலைவன் படம் குறித்து திமுக தொண்டர்கள் படம் வெற்றியை வாழ்த்து பதிவுகளை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில். படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதாக ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை காமெடி காதல் படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் சைக்கோ படத்திற்கு பிறகு வித்தியாசமாக கதைகளத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் வித்தியாசமாக இருந்தது. அதேபோல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகியுள்ள கலகத்தலைவன் படமும் அவரின் ஹிட் லிஸ்டில் இணையும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Udhainithi stalin kalaga thalaivan movie twitter review update in tamil