Advertisment

கடைசி படத்தில் வசூல் மன்னனாக உதயநிதி... மாமன்னன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய உதயநிதி, மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Udhayanithi Maamannan

மாமன்னன் படத்தில் உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சூர்யாவின் ஆதவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி அதன்பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இது கதிவேலின் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சைகோ, நெஞ்சுக்கு நீதி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய அவர், மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் நேற்று (ஜூன் 29) வெளியானது.

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் மூலம் முத்திரை பதித்த மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது கூடுதல் பலமான இருந்தது. படம் வெளியாகுமு் முன்பே தேவர் மகன் படத்திற்கு எதிரான படம் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்ததால் படத்திற்கு எதிரான விமர்சனங்களும் அதிகமாக இருந்தது.

இதனிடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாரி செல்வராஜூவின் இயக்கம் வடிவேலு மற்றும் பகத் பாசிலின் நடிப்பு என படம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. காமெடி நடிகராக பார்த்து பழகிய வடிவேலு தற்போது இந்த படத்தின் மூலம் தான் ஒரு கைதேர்ந்த நடிகர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் சுமார் 6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உதயநிதியின் கடைசி படமாக மாமன்னன் படம் அவரின் திரை பயணத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் மற்றும் கடைசி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment