நடிகர் சங்க கட்டிடத்தை சீக்கரமாக கட்டி முடியுங்கள் இவன் கல்யாணம் பண்றேன் பண்றேனு சொல்லிட்டு ஏமாத்திக்கிட்டே இருக்கான் என்று நடிகர் உதயநிதி நடிகர் விஷால் குறித்து பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழக்கையை தொடங்கினார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான விஷால் தொடர்ந்து சண்டகோழி, திமிரு என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் கலவையான விமாசனங்களை பெற்றது. அதிலும் சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து. இந்நிலையில் தற்போது விஷால் புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் துப்பாறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குநர் என பன்முக திறமை கொண்ட விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் விஷால் தற்போது நடித்து வரும் லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், மற்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுடன் தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதில் பள்ளி கல்லூரி தொடங்கி தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வரை பல நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விஷாவில் பேசிய விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர் வரவேண்டும் என்று அப்போதே அவர்களிடம் சொன்னேன் என்று கூறியுள்ளார். அப்போது குறுக்கிட்ட உதயநிதி, அந்த கட்டிடத்தையாவது சீக்கிரம் கட்டி முடிங்க கல்யாணம் பண்ணாம இவன் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கும் அனிஷா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil