scorecardresearch

கருணாநிதி வேடத்தில் நடிக்கிறாரா உதயநிதி? பயோ பிக் தகவல் குறித்து விளக்கம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதி வேடத்தில் அவரது பேரனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனானக நடிக்கிறார் என்று செய்திகள் பரவிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Udhayanidhi Stalin, Udhayanidhi Stalin clarified about DMK leader karunanidhi bio pic, உதயநிதி ஸ்டாலின், karunanidhi bio pic, கருணாநிதி பயோ பிக், psycho movie, DMK leader karunanidhi, Udhayanidhi Stalin denied on karunanidhi bio pic

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

தமிழக மக்களுக்கு நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அரசியலில் நுழைந்து திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் பிஸியான அரசியல் பணிகளுக்கு இடையே அவர் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் டபுள் மீனிங் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சைக்கோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில், அவருடன் அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், ஷாஜி, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். சைக்கோ படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்ன நெனச்சு நெனச்சு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சைக்கோ திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவும் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பயோ பிக்கில் அவரது வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

கருணாநிதியின் பயோபிக்கை ‘என் காதலி சீன் போடுறா’ படத்தை இயக்கிய ராம் சேவா இயக்க உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இது குறித்து அறிந்த உதயநிதி ஸ்டாலின், இந்த செய்தி உண்மை இல்லை என்று உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi stalin clarified about dmk leader karunanidhi bio pic