’மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு சொகுசு காரை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
வடிவேலு, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் , உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மாமன்னன் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
நடிகர் கமல் நடித்த தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வருத்தம் தெரிவித்தார். மாமன்னன் உருவாகக் காரணம் தேவர் மகன்-தான் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் ’தேவர் மகன் உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? என்று முடிவு செய்து எடுத்தப்படம்தான் மாமன்னன் என்றும் மாரி செல்வராஜ் கூறினார்.
Advertisment
Advertisements
தேவர் மகன் தொடர்பான அவரது விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் அவரின் கருத்தை பலரும் விமர்சித்தனர். மேலும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மாமன்னன் படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. எம்.பி மற்றும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் படத்தை பாராட்டி பேசினர்.
இந்நிலையில் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை உதயநிதி பரிசாக அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“